இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா ஆனது

0 3085

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 183 ரன்களும், இந்திய 278 ரன்களும் எடுத்தன. 95 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி  2ஆவது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 14 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது.

ரோகித் சர்மா, புஜாரா ஆகியோர் தலா 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 5-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாததை அடுத்து போட்டி வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments