தமிழ்நாட்டின் 10 ஆண்டுகால நிதிநிலை வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு..!

0 2580

மிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியாகிறது.

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடுகிறார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன, கடன் விவரங்கள், வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நிதிநிலை தொடர்பான இந்த வெள்ளை அறிக்கை, தமிழக அரசியலில் புயலை கிளப்பும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments