லடாக் எல்லைக்கு அருகே, சீனாவை எதிர்கொள்ள, இந்திய விமானப்படையின் பலம் அதிகரிப்பு..!

0 2780
எல்லையில் சீனாவை எதிர்கொள்வோம்- இந்திய விமானப்படை உறுதியான நடவடிக்கை

சீனாவை எதிர்கொள்ள லடாக் எல்லைக்கு அருகே இந்திய விமானப்படை தனது பலத்தை அதிகரித்து வருகிறது. எல்லையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திற்குள் அதிநவீன ஹெலிகாப்டர்கள் வட்டமிடுகின்றன.

லடாக் எல்லையில் சீனா தனது படைபலத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்தியா தனது விமானப்படை பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. லடாக் எல்லையை சில நிமிடங்களில் எட்டக் கூடிய தூரத்தில் அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களும், சின்னூக் ஹெலிகாப்டர்களும், கருடா சிறப்பு எம்.ஐ.17 ஹெலிகாப்டர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விரைவில் இப்பகுதியில் விமானப்படைக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போல் இக்லா ஏவுகணைகளையும் விமானப்படை இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலைத் தடுப்பதற்காக நிறுத்தி வைத்துள்ளது. லே பகுதியிலும் தனது விமானப் படை பலத்தை தயார்நிலையில் நிறுத்தி வைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

தற்போது பேச்சுவார்த்தையின் பலனாக கோக்ரா பான்காங் சோ ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து சீனா படைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. ஆயினும் எதிர்காலத்தில் எந்தவித அத்துமீறலும் ஆக்ரமிப்பும் நிகழாதவண்ணம் இந்திய விமானப் படை எல்லைக்கோடு அருகே தனது பலத்தை அதிகரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments