கோவையில் நகைகள் செய்ய தங்கம் தருவதாக கூறி நகை பட்டறை உரிமையாளரிடம் 50 சவரன் நகைகள் மோசடி

0 6251

கோவையில் தங்க நகைகள் செய்ய ஆர்டர் தருவதாகக் கூறி, நகை பட்டறை உரிமையாளரிடம் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

சலீவன் வீதியில் தங்க நகைப்பட்டறை வைத்திருக்கும் சரவணனை, அங்குள்ள வணிகவளாகத்தில் அறை எடுத்து தங்கியிருந்த வெங்கடேஷ், கௌதம் ஆகியோர் சந்தித்தனர்.

நகைகள் செய்ய தங்கம் தருவதாகவும், அதற்கு முன்னதாக சரவணன் வடிவமைத்த நகைகளை பார்க்க வேண்டும் எனவும் கூறி, அவரிடம் இருந்த ஆரம், நெக்லஸ், கம்மல் உள்ளிட்ட 50 சவரன் நகைகளை வாங்கிச் சென்றனர்.

நீண்டநேரம் இருவரும் திரும்பிவராத நிலையில், அவர்களது அறைக்கு சென்று பார்த்தபோது, நகைகளுடன் இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments