கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வாட்ஸ் ஆப்பில் பெற புதிய வழி..!

0 4868

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழைச் செல்பேசியில் வாட்ஸ் ஆப் வழியே பதிவிறக்கம் செய்யலாம் என மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெற 4 படிகள் கொண்ட எளிய வழிமுறையை மத்திய நலவாழ்வு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி முதலில் தடுப்பூசிக்கு நாம் பதிவு செய்த எண் கொண்ட செல்பேசியில் +919013151515 என்கிற எண்ணைச் சேமிக்க வேண்டும்.

இரண்டாவதாக அந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் Covid Certificate எனத் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். மூன்றாவதாக நமக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை உள்ளிட வேண்டும்.

நான்காவதாகத் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை ஒருசில நொடிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments