ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும் -மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

0 2685

ரக உள்ளாட்சித் தேர்தலில் 100சதவீதம் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கும் 9 மாவட்ட திமுக செயலாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான பணிகள், வியூகங்கள், வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் நடக்கவிருக்கும் 9 மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை, பொறுப்பாளர்களாக நியமிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments