நடிகை மீரா மிதுன் மீது சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு

0 4913
நடிகை மீரா மிதுன் மீது சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு

பட்டியல் இன சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில் சர்ச்சை நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டியல் இன சமூகத்தினர் தான் அனைத்து குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதாகவும், திரைத்துறையில் இருக்கும் அந்த சமூகத்தினரை வெளியேற்ற வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் நடிகை மீரா மிதும் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது கலகம் செய்ய தூண்டுவது, சாதி, மத விரோதத்தை தூண்டுவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments