துனிசியா அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த 257 அகதிகள் மீட்பு

0 2147
துனிசியா அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த 257 அகதிகள் மீட்பு

துனிசியா அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த 257 அகதிகளை தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டு இத்தாலிக்கு அழைத்து வந்துள்ளது.

சென்ற வாரம் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மொரோக்கோ, வங்கதேசம் , எகிப்து, சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை, எஸ்.ஓ.எஸ் மெடிட்டெரேன் என்னும் தொண்டு நிறுவனத்தின் கப்பல் மூலம் இத்தாலியின் டிரப்பானி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி, வறுமை காரணமாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை அவ்வாறு படகில் புறப்பட்ட 1,100-க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய கடல் பகுதியில் பலியாகி உள்ளதாக ஐநாவின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments