தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 3386

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் இன்றும் நாளையும்  நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 10ஆம் நாள் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும், ஆகஸ்டு 11ஆம் நாள் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments