தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

0 5536
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நிலநிர்வாக இணை ஆணையராக எஸ்.செந்தாமரையும், பொதுப்பணித்துறை இணை செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமாரும், வேளாண்மை துறை கூடுதல் இயக்குநராக பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்துறை இணை செயலாளரான ஏ. ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளராகவும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணை செயலாளரான எம்.லட்சுமி, சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments