லடாக்கில் சீனப்படைகளை எதிர்கொண்டுள்ள இந்திய ராணுவத்தினருக்கு நவீனரக துப்பாக்கிகள்

0 2435
லடாக் எல்லை அருகே சீனப்படைகளை எதிர்கொண்டுள்ள இந்திய ராணுவத்திற்கு நவீன ரக துப்பாக்கிகள்

கிழக்கு லடாக்கில், கட்டுப்பாட்டு எல்லைப் பகுதி அருகே ஓராண்டுக்கும் மேலாக சீனப்படைகளை நேருக்கு நேராக எதிர்கொண்டுள்ள இந்திய ராணுவத்தினருக்கு புதிதாக அதிநவீன அமெரிக்க மற்றும் ஸ்விஸ் தயாரிப்பு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்க சிக் சாவர் 716 ரைபிள் மற்றும் ஸ்விஸ் MP-9  கைத்துப்பாக்கிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

கோக்ரா மலைச்சிகரங்களில் இருந்து சீனப்படைகள் கூடாரங்களை காலி செய்து திரும்பிக் கொண்டிருந்த நிலையில் மலைப்பகுதியில் யுத்தத்தை எளிதாக்கக் கூடிய வகையில், 500 மீட்டர் தூரத்தில் எதிரியை சுடக் கூடிய நவீனத் துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்குக் கிடைத்துள்ளன. இவற்றை தேவைப்பட்டால் இந்திய ராணுவத்தினரால் இப்போது பயன்படுத்த முடியும் .

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments