சிம்புவால் நொந்து துணிந்த தயாரிப்பாளர்கள் பெப்ஸியுடன் மோதல்..!

0 5700

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெட் கார்டு போட மறுத்ததால், பெப்சியுடனான ஒப்பந்தந்தை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முறித்துக் கொண்டுள்ளது. 

நடிகர் சிம்பு மாநாடு என்ற படத்தை முடித்த கையோடு, ஐசரி கணேசின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு என்று நிம்மதியாக நடிக்க சென்று விட்டார். ஆனால் சிம்புவிடம் பணம் கொடுத்து விட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்காமல், சிம்பு படத்தின் படப்பிடிப்பை தொடங்க கூடாது என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட்கார்டு போட்டது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கதலைவர் முரளிராமசாமி, திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணிக்கு எழுதிய கடிதத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. ஆர்,கே செல்வமணியும் அதற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் தற்போது ஐசரி கனேஷுக்கு ஆதரவாக தடையை மீறி சிம்பு படத்திற்கு ஒத்துழைப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ் நாடு திரைப்படதயாரிப்பாளர் சங்கம், பெப்சிக்கு ஒத்துழைக்காது என்றும் தங்கள் விருப்பபடி ஆட்களை வைத்து படப்பிடிப்பை நடத்துவோம் என்றும் பெப்சியை சேர்ந்த எவரும் தங்களை கட்டுப்படுத்த முடியாது என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் தலைவர் முரளி ராமசாமி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பெப்ஸி தலைவர் ஆர்.கே செல்வமணி, சிம்பு படப்பிடிப்பிற்கு, முதலில் ஐசரி கணேஷ் படத்திற்கு அனுமதி கொடுத்த முரளி ராமசாமி எதற்காக மாற்றி பேசுகிறார் என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், ஐசரி கணேஷ், திரைப்படத் தொழிலாளர்களுக்கு 10 வருடங்களாக உதவி வருகிறார், தயாரிப்பாளர் சங்கம் எடுக்கின்ற முடிவால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் உறுதியாக தமிழக முதல்வரை சந்தித்து முறையிடுவோம் என்றும் 100 சதவீதம் தாங்கள் தவறு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தனை பிரச்சனைக்கும் காரணா கர்த்தாவாக தயாரிப்பாளர் சங்கத்தால் சுட்டிக்காட்டப்படும் நடிகர் சிம்பு, 10 வருடத்திற்கு முன்பு திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸிடம் 1 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார். மைக்கேல் இராயப்பனுக்கு டிரிபிள் ஏ படத்துக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு, ஞானவேல்ராஜவுக்கு செய்து கொடுக்க வேண்டிய படம், சாமி பிக்சர்ஸுக்கு ஒரு கோடி ரூபாய் என்று சிம்பு கொடுக்க வேண்டிய பட்டியல் நீள்வதால், வட்டியுடன் அனைவருக்கும் பணத்தை கொடுத்து விட்டு புதிய படத்தில் நடிக்கலாம் என்றும், அதுவரை சிம்பு படத்திற்கு ஒத்துழைக்க கூடாது என்று ரெட்கார்டு போடப்பட்ட நிலையில், அதனை ஃபெப்சி மீறியதால், அதனுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து தயாரிப்பாளர்கள் கொதித்து போய் உள்ளனர்.

இவ்வளவு களேபரங்களுக்கும் இடையே சிம்புவோ தனக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமில்லாதது போல வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments