தமிழ்நாட்டில் இன்று மற்றும் வருகிற 11 ந் தேதிகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை

0 3169

தமிழ்நாட்டில் இன்று மற்றும் வருகிற 11 ந் தேதிகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆடி அமாவாசை நாளான இன்றும், ஆடி பூரமான வருகிற 11ஆம் தேதியும், கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் கொரோனா முன்னெச்சரிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.

அதேசமயம் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரம் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments