கோயம்புத்தூர்: மீன், இறைச்சி, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு இன்று ஒருநாள் கடும் கட்டுப்பாடுகள்.!

0 33984

கோவை மாவட்டத்தில் இன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கோவையில் உள்ள அனைத்து மால்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் இன்று செயல்பட அனுமதி இல்லை. அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் செயல்பட தடை தொடரும் நிலையில், பூங்காக்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி,துடியலூர் சந்திப்பு, ஆகிய இடங்களில், அத்தியாவசிய கடைகள் தவிர மதுக்கடைகள் உள்பட மற்ற கடைகள், இன்று ஒருநாள் இயங்க அனுமதி இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments