நவீனத் தமிழகத்தைக் கட்டமைக்கக் கலைஞர் மகத்தான பங்களிப்பு - ராகுல்காந்தி

0 3604
நவீனத் தமிழகத்தைக் கட்டமைக்கக் கலைஞர் மகத்தான பங்களிப்பு - ராகுல்காந்தி

நவீனத் தமிழகத்தைக் கட்டமைக்கக் கலைஞர் கருணாநிதி மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டித் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கலைஞர், சமூகப் புரட்சியின் மூலம் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய சமுதாயச் சிற்பிகளில் ஒருவர் மட்டுமல்ல, கூட்டாட்சி அரசியலில் மாநில நலன்களுக்கு அங்கீகாரத்தை உறுதி செய்தவர் என்றும், மக்களின் பண்பாட்டையும் அடையாளத்தையும் பாதுகாக்க அடித்தளமிட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னேற்றக் கொள்கைக்கான மக்கள் இயக்கத்தைக் கட்டமைத்தது, அவரின் தீரமிக்க போராட்டம் ஆகியவற்றில் இருந்து நாம் வலிமை பெறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments