ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது மும்பை உயர்நீதிமன்றம்

0 2433
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது மும்பை உயர்நீதிமன்றம்

ஆபாச பட வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் ஜாமீன் மனுவை, மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஆபாச படங்கள் தயாரித்து ஆப்கள் மூலம் விநியோகித்த வழக்கில், தொழிலதிபரான குந்த்ரா, கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தாம் தயாரித்தது ஃபோர்னோகிராஃபி எனப்படும் நீலப்படங்கள் அல்ல என்றும், தாம் தயாரித்தது போன்ற கன்டன்ட்டுள் ஓடிடி தளங்களில் இருப்பதாகவும் கூறும் குந்த்ரா, கைது நடவடிக்கை முறைப்படி எடுக்கப்படவில்லை எனக் கூறி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

முறைப்படி நோட்டீஸ் அளித்தும் குந்த்ரா அதை ஏற்கவில்லை என்றும், வழக்கிற்கான வாட்ஸ்ஆப் ஆதாரங்களை அழித்ததாகவும் போலீசார் தரப்பு கூறியிருந்தனர். இந்நிலையில், கைது நடவடிக்கை மேற்கொண்டதில் உரிய நடைமுறைகள் ஏதும் மீறப்படவில்லை எனக் கூறி, குந்த்ராவின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments