உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

0 3056
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவது தொடர்பாக நாளை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளன.

அந்த 9 மாவட்டங்களிலும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments