அமெரிக்காவில் 50% பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: அதிபர் மாளிகை தகவல்

0 1888

அமெரிக்க மக்களில் ஐம்பது விழுக்காட்டினருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் கொரோனா புள்ளி விவரத் தரவுகளுக்கான இயக்குநர் சைரஸ் ஷாபர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், அமெரிக்காவில் 50 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான தடுப்பூசி இயக்கத்தால் கோடைக்காலத்தில் இயல்புநிலை திரும்பும் என நம்பிக்கை பிறந்தாலும், டெல்டா வகை கொரோனா தொற்றுப் பரவலால் அது கேள்விக்குள்ளாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments