நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 2613
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி  மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments