பள்ளத்தாக்கில் விழ இருந்த பேருந்தை சாமர்த்தியமாக செயல்பட்டு 22 பேர் உயிரை காப்பாற்றிய டிரைவர்...

0 3028
இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பேருந்தை தனது உயிரை பணயம் வைத்து, மற்ற பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பேருந்தை தனது உயிரை பணயம் வைத்து, மற்ற பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிர்மிர் மாவட்டத்தின் ஷில்லாய் பகுதியில் 22 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனை அடுத்து தடுமாறிய பேருந்து சாலையோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்தது.

ஆனால் உடனடியாக சுதாகரித்துக் கொண்ட டிரைவர் பிரேக் போட்டதால் பேருந்து சாலைக்கும் பள்ளத்தாக்கிற்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது.

அத்துடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பேருந்தை டிரைவர் கட்டுக்குள் கொண்டு வந்து பயணிகள் 22பேரும் வெளியேறும் வரை பிடித்து வைத்திருந்தார். பேருந்தில் இருந்து வெளியேறிய பயணிகள் பிறகு ஓட்டுனரை பத்திரமாக மீட்டதாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments