கோவையில் விஏஓ உதவியாளர், தனிநபர் ஒருவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி

0 9447

கோவை ஒட்டர்பாளையம் கிராமத்தில், விஏஓ அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் தனிநபர் ஒருவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர், கிராம நிர்வாக அலுவலகம் சென்று, தனது சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக வி.ஏ.ஓ கலைச்செல்வியை அணுகியுள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வியுடன் கோபால்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனை வி.ஏ.ஒ உதவியாளர் முத்துசாமி தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

அப்போது கோபால்சாமி, முத்துசாமியின் சாதியைச் சொல்லியும், ஊரில் இருக்க முடியாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகளும், காலில் விழுந்த முத்துசாமியை மன்னித்துவிட்டேன் எழுந்திரு என கோபால்சாமி சொல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

கோபால்சாமியின் மிரட்டலுக்குப் பயந்தே, முத்துசாமி காலில் விழுந்து, தலையில் அடித்துக்கொண்டு அழுததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோபால்சாமி அன்னூர் காவல் நிலையத்தில் வி.ஏ.ஒ உதவி உதவியாளர் முத்துசாமி தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். அதேபோல, விஏஒ கலைச்செல்வி, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கோபால்சாமி மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இருதரப்பினரும் காவல் நிலையம் சென்று சமாதானமாக செல்வதாக எழுதிக் கொடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

விஏஓ-வின் உதவியாளரை காலில் விழுந்து, தலையில் அடித்துக் கொண்டு அழுத வீடியோ வைரலான நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். அதற்காக வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து தெளிவான அறிக்கை சமர்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விஏஓ-வின் உதவியாளரை காலில் விழுந்து, தலையில் அடித்துக் கொண்டு அழுத வீடியோ வைரலான நிலையில், அந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து தெளிவான அறிக்கை சமர்பிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments