கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி சடலங்களாக மீட்பு

0 3755

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி சடலங்களாக மீட்கப்பட்டனர்.

ஈக்காடு பகுதியை சேர்ந்த 13, 14 மற்றும் 15 வயதுடைய 3 சிறுவர்கள் நேற்று மீன் பிடிக்க கொசஸ்தலை ஆற்றிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இரவு வரை மூவரும் வீடு திரும்பாத நிலையில் போலீசார், தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி 3 மணி நேரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

3 சிறுவர்களும் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments