கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்... நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

0 3572

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரீனாவில் உள்ள கலைஞரின் நினைவிட வளாகம் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. "தமிழ் சமுதாய வளர்ச்சிக்கான இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம்" என்ற வாசகம், முதலமைச்சர் கையொப்பத்துடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞர் நினைவிடம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்கள், கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர். முன்னதாக அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments