பெண் ஊழியர் மீது புலி தாக்குதல்... safari உயிரியல் பூங்கா மூடல்

0 2990

சிலி உயிரியல் பூங்காவில் துப்புரவு பணியில் இருந்த பெண் ஊழியரை புலி அடித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புலிகள் கூடாரத்தின் அருகே பெண் துப்புரவு பணியில் இருந்ததாகவும், கூடாரத்தின் கதவு திறந்து இருந்ததை பெண் ஊழியர் கவனிக்கவில்லை என்றும், அதன் வழியாக புலி, பெண் ஊழியரை அடித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண் ஊழியரின் கழுத்து பகுதியில் புலி தாக்கியதற்கான காயங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணை முடியும் வரை சிலி safari உயிரியல் பூங்கா மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments