இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 278 ரன்கள் குவிப்பு

0 3613

இந்தியா- இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.

2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக முன் கூட்டியே நிறுத்தப்பட்ட நிலையில், 3-வது நாளில் கே.எல்.ராகுல் 84 ரன்கள் குவித்து அவுட்டானார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் Ollie Robinson 5 விக்கெட்டுகளும், James Anderson 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சைத் தொடங்கி, விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்த நிலையில் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. Rory Burns 11 ரன்களும், Dom Sibley 9 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments