கர்நாடகாவில் 9-12 வகுப்புகளுக்கு ஆக.23 முதல் பள்ளிகள் திறப்பு

0 1482

கர்நாடகத்தில் வரும் 23 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து பள்ளிகள் திறக்கப்படும் முடிவை அவர் அறிவித்தார். 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது பற்றி  கடைசி வாரத்தில்  முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கேரளா, மகாராஷ்டிரா எல்லைப்புற மாவட்டங்களில் இரவு நேரங்களிலும், வாரஇறுதி நாட்களிலும் ஊரடங்கு நீடிக்கும் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments