லாரி டயருக்கு அடியில் படுத்த கருப்பு எலுமிச்சை..! ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சிப்பா..!

0 5439
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மூக்கு முட்ட குடித்த மதுப்பிரியர் ஒருவர் தனக்கு கூடுதலாக மதுவேண்டும் எனக்கேட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்...

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மூக்கு முட்ட குடித்த மதுப்பிரியர் ஒருவர் தனக்கு கூடுதலாக மதுவேண்டும் எனக்கேட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்...

பரமக்குடியை சேர்ந்த மது வெறியர் ஒருவர் மூக்கு முட்ட குடித்துவிட்டு செய்த ரகளையால் வாகன ஓட்டிகள் சற்று பதற்றமடைந்தனர்.

சாலையில் அமர்ந்து இரு கைகளையும் உயர்த்தி தனக்கு சரக்கு போதாது இன்னும் வேண்டும் என்று புரட்சி செய்த அந்த கருஞ்சட்டை புயல், கொண்டா சரக்க என்று சாலையில் சென்ற லாரியை மறித்து வம்பு செய்தது..!

சாலையில் மறியல் செய்தவரை திடீரென ஆளை காணவில்லையே என்று பார்த்த லாரி ஓட்டுனருக்கு ஷாக் கொடுக்கும் விதமாக லாரி டயரில் மாட்டிய எலுமிச்சை பழம் போல சென்று படுத்துக்கொண்டு சரக்கிற்காக அடம்பிடித்தார் அந்த மதுவெறியர்..!

லாரி ஓட்டுனர் பொறுமையானவர் என்பதால் உயிர் தப்பியது அல்லது அந்த கருப்பு சட்டை எலுமிச்சை நசுங்கி இருக்கும்..! அங்கிருந்து எழுந்து பேருந்து இருசக்கர வாகனம் என்று ஒவ்வொன்றாக மறித்த படியே சரக்கு கோரிக்கையுடன் அங்கிருந்து நடையை கட்டினார் அந்த மது வெறியர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments