2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்க இந்தியா திட்டம்

0 3248
2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்க இந்தியா திட்டம்

வாகன எரிபொருளுக்காக எத்தனால் தயாரிப்பது உலக அளவில் சர்க்கரையின் விலையேற்றத்துக்கு வழிவகுக்கும் எனச் சந்தையியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் எத்தனால் தயாரிப்புக்காக ஆண்டுதோறும் 60 இலட்சம் டன் சர்க்கரையை வழங்கவும், பெட்ரோலுடன் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்கவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் காற்று மாசுபாடும், பெட்ரோலிய இறக்குமதிச் செலவும் குறைவதுடன் ஊரகப் பகுதிகளில் கரும்புச் சர்க்கரைத் தொழிலில் முதலீடு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சர்க்கரை மற்றும் அதை உட்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களின் விலையேறும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments