சீனாவில் நிறுத்தப்பட்டு இருந்த கார் திடீரென முன்னோக்கி நகர்ந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

0 2515
சீனாவில் நிறுத்தப்பட்டு இருந்த கார் திடீரென முன்னோக்கி நகர்ந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

சீனாவில் நிறுத்தப்பட்டு இருந்த கார் திடீரென நகர்ந்து பள்ளத்தாக்கில் விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது. Xinjiang பகுதியில் உள்ள சுற்றலா தளம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழந்தது.

ஓட்டுனர் இருக்கையில் இருந்தவர் கீழே இறங்கிய சிறிது நேரத்தில், முன்புறம் இருந்த பள்ளத்தாக்கை நோக்கி கார் நகர்ந்தது. உடனே காரில் பின் இருக்கையில் இருந்த வயதான பெண்ணும், சிறுவனும் கீழே இறங்கி விட்டனர்.

ஆனால் முன் இருக்கையில் இருந்த பெண், சீட் பெல்ட்டை உடனடியாக கழற்ற முடியாதால் கீழே இறங்க முடியவில்லை. பள்ளத்தாக்கில் கார் விழுந்ததில் அந்த பெண் பலத்த காயமடைந்து மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டார்.காரின் ஹேண்ட் பிரேக் பெயிலியர் ஆனதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments