கிரிக்கெட் வீரர் தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த நீலநிற பேட்ஜ் நீக்கம்

0 1976
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்த நீல நிற பேட்ஜை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்த நீல நிற பேட்ஜை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்குகளை உருவாக்கி தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தவிர்க்க, குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்ட கணக்கு என்பதை குறிக்கும் வகையில் நீல நிற பேட்ஜ் ட்விட்டர் நிறுவனத்தால் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தோனியின் ட்விட்டர் கணக்குக்கு கொடுக்கப்பட்டிருந்த நீல நிற பேட்ஜ் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை ட்விட்டர் நிறுவனம் வெளியிடாத நிலையில், ட்விட்டரில் ஆக்டிவாக இல்லாததால் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தோனி கடைசியாக தனது ட்விட்டரில் இந்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments