பிரதமர் மோடி பாராட்டியபோது, கண்ணீர்விட்டு அழுத இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள்

0 3276

"என்ன ஒரு அற்புதமான எதிரணி, என்ன ஒரு அற்புதமான ஆட்டம்" என இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு, பிரிட்டன் ஹாக்கி அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

வெண்கலப் பதக்கத்தை தட்டிச் செல்வதற்காக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், கடைசி நிமிடம் வரை த்ரில் நீடித்தது. வெற்றிபெற்ற பிரிட்டன் வீராங்கனைகள் ஆனந்தக் கண்ணீரில் மிதக்க, இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்த சோகத்தில் இருந்தனர். அப்போது வீராங்கனை நேகாவுக்கு, பிரிட்டன் அணி தரப்பில் ஆறுதல் கூறினர்.

இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரிட்டன் ஹாக்கி அமைப்பு, இந்திய அணி சிறப்பாக விளையாடியிருப்பதாகவும், அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் பாராட்டியுள்ளது. இதனிடையே, மகளிர் ஹாக்கி அணியை தொடர்புகொண்டு பிரதமர் பாராட்டியபோது, வீராங்கனைகள் கண்ணீர்மல்க காட்சியளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments