ராஜஸ்தானில் கனமழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு

0 1629
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

தொடர்ந்து 6 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் காளிசிந்த், பீம் சாகர் ஆணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், பல வாகனங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் குளம் போல் காட்சி அளிக்கின்றன. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments