ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய்க்குப் உதவிய பிரதமர் மோடி

0 2382
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய்க்குப் பிரதமர் மோடி உதவி

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெறவும், பயிற்சிபெறவும் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக உதவி செய்ததாக மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

தசைப் பிடிப்புக்கு அறுவைச் சிகிச்சை செய்யவும், பயிற்சி பெறவும் அமெரிக்காவுக்குச் செல்லப் பணமின்றித் தவித்த போது அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு பிரதமர் உதவி செய்ததாகத் தன்னிடம் மீராபாய் சானு தெரிவித்ததாகக் கூறினார்.இதையறிந்ததும் பிரதமருக்குத் தான் நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் பிரேன் சிங் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments