ஹாக்கி நட்சத்திர வீராங்கனை வந்தனா குடும்பத்தினரை சாதியின் பெயரால் இழிவுபடுத்திய விவகாரம்; ஹாக்கி வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது

0 4375

ந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை வந்தனா கட்டாரியா குடும்பத்தினரை சாதியின் பெயரால் இழிவுபடுத்திய, தேசிய அளவிலான ஹாக்கி வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் அரையிறுதியில் மகளிர் ஹாக்கி அணி தோல்வியடைந்தவுடன், உத்தரகாண்ட் மாநிலம் ரோஷன்பாத்தில், வந்தனா கட்டாரியாவின் வீட்டருகே சிலர் பட்டாசு வெடித்து, நடனமாடியதோடு அவரது குடும்பத்தினரை சாதியின் பெயரால் வசைபாடியுள்ளனர்.

வந்தனா போன்ற தலித்துகள் அளவுக்கதிமாக இடம்பெற்றதால்தான் இந்திய அணி தோற்றதாகவும் கூறி இழிவுபடுத்தியுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய ஹாக்கி வீராங்கனையான வந்தனா கட்டாரியா, தலித்தாக இருப்பது குற்றமா என ட்விட்டரில் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், சகோதரர்களான அங்குர் பால், விஜய் பால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட சுமித் சௌகான் என்பவனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட விஜய் பால், தேசிய அளவில் உத்தரகாண்ட் மாநிலத்திற்காக ஹாக்கி விளையாடுபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments