இன்னும் பயிற்சி வேண்டுமோ? ஏடிஎம்மில் சிக்கிய எலிச்சாமி..! நள்ளிரவில் கையும் களவுமாக பிடிபட்ட வடமாநில திருடன்

0 5898

நாமக்கல் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயற்சி செய்த வடமாநில இளைஞன், பொறியில் சிக்கிய பெருச்சாளி போல, உடைக்கப்பட்ட எந்திரத்தில் கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கிக் கொண்டான். நூறாவது திருட்டை அரங்கேற்றும் வேளையில் மாட்டிக் கொண்ட ஸ்டைல் பாண்டி போல, ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்த பீகார் எலிச்சாமி, சிக்கியது குறித்த செய்தித் தொகுப்பு..

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் இந்தியா ஒன் ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில் அவ்வழியே சென்ற போலீசார், ஏடிஎம்மில் இருந்து சத்தம் வருவதை கேட்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு, போலீசார் வந்த சத்தத்தை கேட்டு, வளைக்குள் இருந்து வெளியே எட்டிப்பார்த்த பெருச்சாளி போல, ஒரு நபர் ஏடிஎம் எந்திரத்திற்குள் இருந்து தலையை தூக்கி பார்த்துள்ளான்.

பணத்தை கொள்ளையடிப்பதற்கு ஏடிஎம் எந்திரத்தை பின்புறமாக உடைத்த நிலையில், போலீசார் வந்துவிட்டதால், நூறாவது திருட்டை அரங்கேற்றும் வேளையில் சிக்கிக் கொண்ட ஸ்டைல் பாண்டி போல திருடன் விழித்த காட்சிகள் யாருக்கும் சிரிப்பை வரவழைத்து விடும்.

ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல், ஏடிஎம்மில் சிக்கிய அந்த எலிச்சாமியை, வீடியோ எடுப்பதற்காக வெளியே வராமல், ஏடிஎம் எந்திரத்திலேயே இருக்குமாறு போலீசார் அதட்டினர். வீடியோவெல்லாம் எடுத்துவிட்டீர்களே அப்புறம் என்ன, என இந்தியிலேயே கூறியவாறு கூலாக வெளிவந்த அந்த சூனாபானாவை கோழி அமுக்குவது போல அமுக்கிய போலீசார் காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

விசாரணையில் அந்த நபர் பீகார் மாநிலத்தை உபேந்திர ராய் என்பதும் மோகனூர் அருகே பரளியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழித் தீவன ஆலையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. நோட்டம் விட்டு நள்ளிரவில் ஏடிஎம்மை உடைத்து திருட முயன்ற அந்த நபர் மீது வழக்கு பதிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரின் நள்ளிரவு ரோந்தால், ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த லட்சக் கணக்கான ரொக்கப் பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments