பொன்னேரியில் புறநகர் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் - 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

0 2013

திருவள்ளூரில் உள்ள பொன்னேரியில் காலை முதல் பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் சுமார் 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கிருந்து காலை ஏழு முப்பது மணி அளவில் சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் புறநகர் ரயிலுக்காக பயணிகள் காத்துகொண்டிருந்த போது,சென்ட்ரல் செல்லும் ரயிலுக்கு பதிலாக வேளச்சேரிக்கு செல்லும் ரயில் விடப்பட்டது. இது பற்றி ரயில் நிலைய அதிகாரியிடம் முறையிட்ட போது, அந்த அதிகாரி, 20 நிமிடம் தாமதமாக போனால் என்ன? என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின் காலை முதல் ஆங்காங்கே நின்றபடி இருந்த பல ரயில்கள் 5மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஓடத் தொடங்கின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments