சொத்து பிரச்சனையில் தம்பியையும், அவரது மனைவியயும் வெட்டிய அண்ணன்; வெட்டுப்பட்ட இருவரும் ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் புகாரளிக்க வந்ததால் பரபரப்பு

0 1805

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சொத்து பிரச்சனையில் தம்பியையும், அவரது மனைவியையும் அண்ணன் அரிவாளால் வெட்டிய நிலையில், வெட்டுப்பட்ட இருவரும் ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கெச்சானிபட்டியைச் சேர்ந்த அண்ணன் தவமணிக்கும், தம்பி வனராஜுக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இதன் காரணமாக நேற்று இரு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தவமணி குடும்பத்தினர் வனராஜையும், அவரது மனைவி ராசாத்தியையும் இரும்பு கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

ரத்தம் சொட்ட சொட்ட வந்தவர்களை சமாதானப்படுத்தி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த போலீசார், தவமணி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments