வீட்டில் இருந்து பயிற்சி மையம் செல்ல லிப்ட் கொடுத்த லாரி ஓட்டுநர்களை நேரில் வரவழைத்து உபசரித்த மீராபாய் சானு

0 7960

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு, தான் கஷ்டப்படும் காலத்தில் வீட்டில் இருந்து பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்று உதவிய மணல் லாரி ஓட்டுநர்களை நேரில் அழைத்து நன்றி தெரிவித்து உபசரித்தார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மீராபாய் சானு. அங்கிருந்து இம்பாலுக்கு பயிற்சி மையத்திற்கு வருவதற்கு போதிய அளவு பணம் இல்லாததால், அவ்வழியாக வரும் மணல் லாரிகளில் லிப்ட் கேட்டு பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில்,ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதை அடுத்து,தனக்கு உதவிய சுமார் 150 லாரி ஓட்டுநர்களை நேரில் அழைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். அத்தோடு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, மத்திய உணவும் அளித்து உபசரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments