சாலையில் செல்லும்போது திடீரென தீப்பிடித்த புதுச்சேரி அரசு பேருந்து

0 2400

மயிலாடுதுறையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.

பொறையாறு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்ற பேருந்து ராஜீவ்புரம் என்ற இடத்தில் வந்தபோது, பேருந்தின் முன்பக்கம் இருந்து புகை வந்துள்ளது.

இதனை பார்த்து சுதாரித்தக்கொண்ட ஓட்டுநர், உடனடியாகப் பேருந்து நிறுத்தியதால் 20 பயணிகள் வேகமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பேருந்து மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கி கரும்புகை வெளியேறியது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments