டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அரையிறுதிக்கு முன்னேறினார் பஜ்ரங் புனியா

0 3262

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் பஜ்ரங் புனியா அடுத்தடுத்து இரு போட்டிகளில் அபாரமாக விளையாடி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். வெண்கலப் பதக்கத்திற்காக, பிரிட்டனுடன் மோதிய இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி வீழ்ந்தது.

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் நாட்டின் அக்மதீலவை (Akmataliev) எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய பஜ்ரங் புனியா, காலிறுதியில் ஈரான் வீரர் மொர்ட்டசாவை (Morteza Cheka Ghiasi) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சீமா பிஸ்லா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா, பிரிட்டனை எதிர்கொண்டது. முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது கால் பகுதியில், இந்தியா 3க்கு2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 3 கால் பகுதியில் இரு அணிகளும் தலா 3 கோல்களுடன் சமநிலையில் இருந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற 4-வது கால் பகுதி ஆட்டத்தில் பிரிட்டன் ஒரு கோல் அடித்துவிட, மகளிர் ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில், முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது.

மகளிர் ஹாக்கியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாலும், இந்திய அணி சிறப்பாக விளையாடியதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments