வழிப்பறி பிச்சை.. பிளேடு கபாலி கைது..! மிரட்டல் வீடியோ வெளியானது

0 3184

கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பிளேடை காண்பித்து பணம் பறித்த ரவுடியின் வீடியோ வெளியான நிலையில் பிளேடுடன் சுற்றிய குடிகார கபாலியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மாலை கையில் பிளேடுடன் போவோர் வருவோரிடம் ரவுடி ஒருவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.. அவனை கண்டு பெண்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்..

அந்த வழியாக வந்த ஒரு இளைஞரை பிடித்து பணம் கேட்டு பிளேட்டை நீட்டி கடுமையாக மிரட்டியதால் அந்த இளைஞரோ செய்வதறியாது கையில் இருந்ததை கொடுத்துச் சென்றார். மற்றொரு நபர் பணம் கொடுக்க மறுத்ததால் அந்த குடிகார ரவுடி அவருடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டான். பின்னர் அவரை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டினான்.

பிச்சை எடுப்பதில் புதுவிதமாக இருப்பதாக சிலர் சொல்லிக் கொண்டாலும் அந்த ரவுடியை யாரும் நெருங்கவில்லை. சிலர் தங்கள் செல்போன் காமிரா மூலம் அந்த ரவுடியின் அட்டகாசத்தை வீடியோ எடுத்தனர். இதையடுத்து, அந்த இடத்தில் இருந்து நழுவ தொடங்கினான் அந்த ரவுடி. மிரட்டிய நபரை சட்டையை பிடித்து இழுத்தபடியே அங்கிருந்து சென்றான்.

இந்த மிரட்டல் காட்சிகள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவிய நிலையில் போலீஸ் விசாரணையில் கையில் பிளேடுடன் வம்பு செய்த அந்த ரவுடி பிளேடு கபாலி என்றும், நாக்கிற்குள்ளும் , கையில் விரல்களுக்கிடையேயும் பிளேடை வைத்து பேண்ட் பாக்கெட், பெண்கள் ஹேண்ட் பேக் போன்றவற்றை கிழித்து பணம் கொள்ளை அடிப்பதை தொழிலாக செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பிளேடை வைத்து போதையில் மிரட்டி பிச்சை எடுத்து வந்த ரவுடி கபாலியை காவல்துறையினர் கைது செய்தனர். மது போதையுடன் கஞ்சா போதையையும் ஏற்றிக் கொண்டு பேருந்து நிலையங்களில் பெண் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக வலம் வந்த ரவுடி கபாலி மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments