ஊரடங்கு தளர்வுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் வருமா? முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

0 2283

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 9-ம்தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார்.

தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிகிறார்.

தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments