சின்ன சின்ன ஆசை பாடலை பாடிய வடமாநில சிறுமியின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரல்

0 3894
சின்ன சின்ன ஆசை பாடலை பாடிய வடமாநில சிறுமி

சின்ன சின்ன ஆசை பாடலை அழகாக பாடிய மேற்கு வங்க சிறுமியின் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வியந்து பாராட்டியுள்ளார்.

1992 -ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளர் ஆனார் ஏ.ஆர். ரஹ்மான். இந்த படத்தில்தான் சின்ன சின்ன ஆசை என்ற அந்த பாடல் இடம் பெற்று பட்டி தொட்டியெல்லாம் பாப்புலரனாது. ரோஜா படத்துக்கு இசையமைத்த பிறகு ஏ.ஆர் ரஹ்மானை இந்தியாவே திரும்பி பார்த்தது. இந்த நிலையில்தான் ஏ.ஆர். ரஹ்மானை தன் சின்ன சின்ன ஆசை பாடலை மீண்டும் ஒரு முறை நினைவுக்கு கொண்டு வந்துள்ளார் மேற்கு வங்கத்து சிறுமி.

சின்ன சின்ன ஆசை பாடலை மேற்கு வங்க சிறுமி இந்தி மற்றும் தமிழிலில்அட்டகாசமாக பாட ரஹ்மானே வியந்து போனார். சிறுமி பாடல் பாடும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். சிறுமி பாடும் இந்த வீடியோவை 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments