ஈமு கோழிப் பண்ணை மோசடி விவகாரம் ; யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

0 3437
ஈமு கோழிப் பண்ணை மோசடி விவகாரம் ; யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

ஈமு கோழிப் பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் 2 கோடியே 70 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் யுவராஜ் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துக் கோவை முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2012ஆம் ஆண்டில் பழனிச்சாமி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெருந்துறையில் ஈமு கோழிப் பண்ணை நடத்திய யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகியோர் மீது ஈரோடு பொருளாதாரக் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இன்று அளித்த தீர்ப்பில் மூவருக்கும் சிறைத்தண்டனையும், 2 கோடியே 47 இலட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments