நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - கல்லூரி கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன்

0 3934
2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர்வதற்கு, ஆகஸ்டு 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் tngasa.org மற்றும் tngasa.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments