பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவிப்பு

0 4055
+2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவிப்பு

ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, வெள்ளிக்கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2020 - 2021 ஆம் கல்வி ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு வரும் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஞாயிற்றுகிழமை தவிர்த்து அரசு தேர்வு துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, மாணவர்கள் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது. கடந்த மே மாதம் பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும், துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் ஆயீரம் ரூபாய் கட்டணம் செலுத்தி 28 ஆம் தேதி அன்று ஆன்லைனில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 துணை தேர்வுகள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுளளது. அனைத்து தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments