பேட்டரியில் இயங்கும் 3 எஸ்யூவி ரக கார்களை அறிமுகப்படுத்தியது ஆடி நிறுவனம்..!

0 5250

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, பேட்டரியில் இயங்கும் 3 எஸ்யூவி ரக கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

இ-டிரான் 50, இ-டிரான் 55 மற்றும் இ-டிரான் ஸ்போர்ட்ஸ் பேக்55 ஆகிய ரகங்களில் அறிமுகமாகி உள்ளன. இதன் விற்பனையக விலை 99 லட்சத்து 99 ஆயிரத்தில் இருந்து ஆரம்பமாகிறது.

இ-டிரான் 50 ரக காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 269 முதல் 379 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என்றும், இ-டிரான் 55 மற்றும் இ-டிரான் ஸ்போர்ட்ஸ் பேக் 55 கார்கள், 5.7 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்கள் அமைக்கவும் ஆடி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் பயன்பாடு வரையில், வாரண்டி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments