தமிழகத்தில் மேலும் 1872 பேருக்கு கொரோனா உறுதி; 2,475 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 3103

மிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 180ஆகவும், சென்னையில் 133 ஆகவும் குறைந்துள்ளது. ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வைரஸ் தொற்று கணிசமாக குறைய, பெரம்பலூரில் பாதிப்பு மீண்டும் ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது.

ஒரே நாளில், 2,475 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர். வைரஸ் பெருந்தொற்றுக்கு மேலும் 29 பேர் பலியானதாகவும், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25,526 ஆக குறைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments