மகாராஷ்டிரத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாள் கனமழை நீடிக்கும் :வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

0 1814

காராஷ்டிரத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்வதால் தானே, பால்கர், ரத்தினகிரி மாவட்டங்களில் அனைத்து ஆறுகளிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. இதனால் மும்பைக்குக் குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் 4 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

வெள்ளம் பாதித்த கடலோரப் பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன் கடற்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பை புறநகர்ப் பகுதியான பிவாண்டியில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் சிக்கித் தவித்தவர்களைத் தேசியப் பாதுகாப்புப் படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments