திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி மோசடி செய்த விவகாரத்தில் மணிகண்டனுக்கு எதிராக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு

0 2458

திருமணம் செய்து கொள்வதாக கூறி, நடிகையை மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவருடன் தொடர்பில் இருந்த நடிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையில் இருந்து கொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினாலும் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கு மீதான விசாரணையை வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments